இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் D40. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

Dhanush

லண்டனில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினர் படக்குழு. அதன் பிறகு மதுரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அசத்தியது. 

Dhanush

பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. மேலும் சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததாகவும் இதுவரை பணிபுரிந்த படங்களிலே இந்த படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்ததாகவும் பதிவு செய்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்ததென குறிப்பிட்டுள்ளார்.