தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக பல மாநிலங்களை கலக்கி வருகிறார்.தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானார் ஹன்சிகா.

தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியல் ஹிட் அடிக்க இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து அசத்தினார் ஹன்சிகா.

அடுத்ததாக சில கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இவரது 50ஆவது படமான மஹா படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் ஹன்சிகா.தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன.