பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பூச்செண்டு போல் இருக்கும் இவரது புன்னகைக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிறுவயது ஜானுவாக தோன்றி, இன்று தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

gourikishan

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆறுதலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

gourigkishan Ramandjanu

இந்நிலையில் நடிகை கௌரி, 96 திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை கொண்ட மீம் பதிவை பகிர்ந்துள்ளார். கொரோனா பயம் நிறைந்த இந்நேரத்தில் ராம் மற்றும் ஜானு மாதிரி தனித்து இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கௌரி.