விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார் ஷிவானி.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் லைவ் வருவது என்று எப்போதும் இருந்து வந்தார் ஷிவானி.

நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.ஷிவானியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.

இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலமான ஒன்றாக இருந்து வந்தன.தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.

லாக்டவுனில் நடிகைகளை விட மிகப்பிரபலமான ஆளாக மாறிவிட்டார் ஷிவானி.இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன..பிக்பாஸ் 4-ல் ஷிவானி கலந்துகொள்ள உள்ளார் என்ற செய்திகளும் இணையத்தில் சுற்றி வருகின்றன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மிகவும் பிரபலமான VJ சித்ரா ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்,இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டோஷூட்டில் ரசிகர் ஒருவர் கவர்ச்சியாக புகைப்படம் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்று பதிவிட்டார்,அதற்கு பதிலளித்த சித்ரா இங்க எதிர்பார்க்காதிங்க,2000-க்கு அப்புறம் பொறந்தவங்க ப்ரொபைல்ல பாருங்க என்று பதிலளித்தார்.உடனே நெட்டிசன்கள் முக்கால்வாசி பேர் சித்ரா ஷிவானியை தான் குறிப்பிடுகிறார் என்று ஷிவானியை டேக் செய்து மீம் போன்றவற்றை ஆரம்பித்து விட்டனர்.மேலும் சிலர் ஷிவானியை தவிர லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த தர்ஷா குப்தா,ரவீனா,அனிகா உள்ளிட்டோரையும் டேக் செய்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என்னை பிடிக்கவில்லை என்னுடைய நடவடிக்கைகளை நீ கவனித்தால் நீயும் என் ரசிகர் தான் என்றும் மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார் என்றும் பதிவிட்டிருந்தார்.உடனே நமது நெட்டிசன்கள் ஷிவானி சித்ராவின் கமெண்டால் கடுப்பாகி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்று மீம்களை போட ஆரம்பித்து விட்டனர்.

உண்மையிலே சித்ரா-ஷிவானி இருவருக்கும் உண்மையிலேயே சண்டை இருந்ததா?, சித்ரா ஷிவானி போன்றோரை குறிப்பிட்டாரா, சித்ராவின் கமென்டிற்கு ஷிவானி பதிலடி கொடுத்தாரா அல்லது எதார்த்தமாக சித்ரா போட்ட கமென்டிற்கு ஏற்றவாரு ஷிவானியும் ஸ்டேட்டஸ் அமைந்ததா ? என்பது பற்றி தெரியவில்லை நெட்டிசன்கள் கொளுத்திவிட்ட இந்த தீ தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்த பிரச்சனை இத்துடன் முடிந்து விடுமா இல்லை இன்னும் தொடருமா என்று தெரியாததால் ரசிகர்கள் பரபரப்புடனும் ஆர்வத்துடனும் காத்திருக்கின்றனர்.

fans confused over chithu vj shivani narayanan cryptic social media posts

fans confused over chithu vj shivani narayanan cryptic social media posts