தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, சத்ரியன் திரைப்பயணத்தை தொடங்கிய விஷ்ணுவர்தன், குறும்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து விஷ்ணுவர்தன் உருவாக்கிய பில்லா திரைப்படம் வவிஷ்ணுவர்தனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைத்தது. தொடர்ந்து சர்வம், ஆரம்பம் என சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக தற்போது பாலிவுட்டில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கார்கில் போரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ஷெர்ஷா படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.  பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா எனும் ராணுவ வீரர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை தர்மா புரோடக்சன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது ஷெர்ஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஷெர்ஷா வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. போரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ஷெர்ஷா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிரடியான டீசர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த டீசரை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.