கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். 

Rathnakumar

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் செய்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேசம மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினர் மீது அப்பகுதியினர் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Rathnakumar

இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மனிதநேயம் எங்கே ? இது காட்டுமிராண்டித்தனம். இதனை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. சில நேரங்களில் இந்த வைரஸ் நமக்கு தேவைதான் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.