கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். ரொமான்டிக் காமெடியான  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். 

rathnakumar

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது சிறிய வயது புகைப்படங்கள் வெளியிட்டும், பல டாஸ்குகள் செய்தும் இந்த லாக்டவுன் நாட்களை கடத்தி வருகின்றனர். 

Rathnakumar

இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தற்போது ட்விட்டரில், தங்களின் 20 வயதில் எடுத்து கொண்ட போட்டோவை #MeAt20 என்கிற ஹாஷ்டேக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரத்னகுமார், தனது 20 வயதில் எடுத்து கொண்ட சூப்பரான போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும், அப்போவே அப்படி என பதிவிட்டுள்ள அவர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் இந்த புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.