முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார். 

adhi dhruv

அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஆதித்ய வர்மா எனும் அசத்தலான டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசைய்யா இந்த படத்தை இயக்கிவருகிறார். படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

ddd dhru

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் ரிலீஸாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் எதற்கடி பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நேற்றிரவு வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.