அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.இதனை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Dhanush Pattas Shoot Resumes Mehreen pirzada

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடிக்கின்றனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Dhanush Pattas Shoot Resumes Mehreen pirzada

சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து இடையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங்கிற்காக தனுஷ் லண்டன் சென்றார்.

Dhanush Pattas Shoot Resumes Mehreen pirzada

தற்போது D40 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததால் பட்டாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ் இணைந்துள்ளார்.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Pattas Shoot Resumes Mehreen pirzada