கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார்.

dhruvvikram

பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார்.

dhruvvikram

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8-ம் தேதியிலிருந்து நவம்பர் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.