கர்ணன் படத்திற்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ் வெற்றிக் கூட்டணி!- புதிய பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!

மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ் வெற்றிக் கூட்டணியின் புதிய படம்,dhanush and mari selvaraj joined again for new movie after karnan | Galatta

ஆரம்ப கட்டத்தில் உருவ கேலி செய்யப்பட்டு பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகராக வலம் வந்து தற்போது இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்திருப்பவர் தனுஷ். கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் என அசத்திய நடிகர் தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் களமிறங்கி வெற்றியும் கண்டுள்ளார். அந்த வகையில் முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான வாத்தி (SIR) திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்துள்ளார் தனுஷ். முன்னதாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனி கவனம் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ், தனது இரண்டாவது திரைப்படத்தில் முதல்முறையாக தனுஷ் உடன் இணைந்த திரைப்படம் கர்ணன். கொரோனா காலகட்டத்தில் 50 சதவிகித இருக்கைகளோடு வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரோடு வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தொடர்ந்து வாழை எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான WUNDERBAR FILMS பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் 15வது திரைப்படமாக தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை WUNDERBAR FILMS உடன் இணைந்து ZEE STUDIOS நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்தின் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

A prestigious project which is special for so many reasons. Om Namashivaya @mari_selvaraj @wunderbarfilms @zeestudiossouth pic.twitter.com/cgxpWN7jk0

— Dhanush (@dhanushkraja) April 9, 2023

'வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'- வேதாளம் படப்பிடிப்பில் அஜித் குமார் உடன் இருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்த சூரி! வீடியோ உள்ளே
சினிமா

'வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'- வேதாளம் படப்பிடிப்பில் அஜித் குமார் உடன் இருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்த சூரி! வீடியோ உள்ளே

சமந்தா டான்ஸ் இருக்கு... வாரிசு ஆடியோ லாஞ்ச் பாணியில் சாகுந்தலம் பட விழாவில் பேசிய தில் ராஜு! வைரல் வீடியோ
சினிமா

சமந்தா டான்ஸ் இருக்கு... வாரிசு ஆடியோ லாஞ்ச் பாணியில் சாகுந்தலம் பட விழாவில் பேசிய தில் ராஜு! வைரல் வீடியோ

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பவர்ஃபுல் பரிசு… மாஸ் அப்டேட் உடன் வந்த தங்கலான் பட அதிரடியான புது போஸ்டர் இதோ!
சினிமா

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பவர்ஃபுல் பரிசு… மாஸ் அப்டேட் உடன் வந்த தங்கலான் பட அதிரடியான புது போஸ்டர் இதோ!