திருமணம் செய்த மறுத்த விபச்சார அழகியை 5 துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த லதா என்கிற சர்மாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது அயூப் என்பவருக்கு பாலியல் ரீதியாக அறிமுகம் ஆகியுள்ளது. இதனையடுத்து, லதா என்கிற சல்மாவிற்கு அவர் ரெகுலர் வாடிக்கையாளராக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முகமது அயூப்பிற்கு, திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன.

murders

இந்நிலையில், பாலியல் தொழிலாளியான லதா என்கிற சல்மாவை, பாலியல் தொழிலை விட்டு விலகும்படியும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு அந்த பாலியல் தொழிலாளி சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த முகமது அயூப், திட்டமிட்டுக் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை, பவானா கால்வாய்க்கு அந்த பெண்ணை நடைப்பயணத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், அந்த பெண்ணை தான் மறைத்து வைத்த கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை 5 துண்டாகக் கத்தியால் வெட்டி, அங்குள்ள கால்வாயில் உடலை அப்புறப்படுத்தி உள்ளார்.

Delhi man

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, கொலையாளி முகமது அயூப்பை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கொலை செய்யப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.