திருடப் போன இடத்தில் திருடனை மடக்கிப்பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

டெல்லியில் கடந்த 30 ஆம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு, பட்ட பகலில், வழிப்பறி திருடர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தெருவிற்குள் வந்துள்ளனர்.

chain snatching

அப்போது, அந்த தெருவோரமாக அம்மாவும், மகளும் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் பக்கத்தில் சென்ற வழிப்பறி திருடர்கள், அம்மாவின் கழுத்திலிருந்த ஜெயினை அறுத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துப்போக முற்பட்டனர்.

ஆனால், அதற்குள் அந்த ஜெயினை பறிகொடுத்த அம்மாவும், மகளும் சேர்ந்து திருடனின் கையை பிடித்து இழுத்து, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். அதற்குள் அந்த வழியாக நடந்து சென்றவர்கள், ஓடி வந்து அந்த திருடனுக்குத் தர்ம அடித்துக்கொடுத்தனர். அதற்குள் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், அவரையும் சிலர் துரத்திச் சென்று தர்ம அடி கொடுத்தனர். ஆனாலும், அடியையும் வாங்கிவிட்டு, அவர் தப்பி ஓடியுள்ளார்.

chain snatching

இதனிடையே பிடிபட்ட வழிப்பறி திருடனை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய திருடனைத் தேடி வருகின்றனர். அத்துடன், திருடன் வழிப்பறியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.