சின்னத்திரையில் தவிர்க்க முடியாத முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் திவ்யதர்ஷினி எனும் DD.விஜய் டிவியில் பல பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கிவந்தவர் அவ்வப்போது விருதுநிகழ்ச்சிகள்,இசை வெளியீட்டு விழா உள்ளவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

DD Dhivyadharshini Announces Enkitta Mothathe 3

இது தவிர பவர்பாண்டி,சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்பீட் கெட் செட் கோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது தனது புதிய ஷோ குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

DD Dhivyadharshini Announces Enkitta Mothathe 3

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகர்,நடிகைகளை வைத்து இவர் தொகுத்து வழங்கிய எங்கிட்ட மோதாதே என்ற தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது என்ற அறிவிப்பை DD தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.