சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரஜினி ரசிகர்களை கொண்டாட செய்தது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 

darbar darbar darbar

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். வெகு நாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் சூப்பர்ஸ்டார் நடித்திருந்தார். 

darbar darbar

2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுவரை 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் தெரியவந்தது. தற்போது படத்திலிருந்து தரம் மாறா சிங்கிள் பாடலின் வீடியோ வெளியானது. அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.