விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிக்கும் படத்தில் பவித்ரா ஹீரோயினாகி நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோவாக காமெடி நடிகர் சதிஷ் நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது,இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்தது.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் பவித்ரா.அதில் பவித்ராவின் அடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாகவும் அடுத்ததாக ஒரு தமிழ் தெலுங்கு Bilingual படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு மற்றும் மேலும் சில படங்களின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

cook with comali pavithra lakshmi opens up about her upcoming films in instagram