பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகர் ரிஷி கபூருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாபி எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.

Rishi Kapoor

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடு திரும்பிய ரிஷி கபூருக்கு நேற்று இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி கபூர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

Rishi Kapoor

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 67. அவருக்கு நீத்து கபூர் என்கிற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர். நேற்று இர்ஃபான் கான் காலமானார். இந்த இரண்டு நாட்களில் இரண்டு பிரபலங்களை பரிகொடுத்துவிட்டு கவலையில் உள்ளனர் ரசிகர்கள்.