பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Irfan Khan

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 54 வயதான இர்ஃபான் கான் 2018 ஆம் ஆண்டில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்திருந்தார். இர்ஃபான் கானின் மறைவு செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Irfan Khan

இவர் நடித்த ஸ்லம் டாக் மில்லினர், லைஃப் ஆஃப் பை, ஜுராஸிக் வேர்ல்ட், அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற ஹாலிவுட் படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். கடைசியாக அங்கிரேஜி மீடியம் எனும் பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.