ஆன்லைனில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.பெரும்பாலும் இவர் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் மட்டுமே செய்துள்ளார்.இவரிடம் பாசிட்டிவான விமர்சனம் வாங்கிய படங்கள் மிகக்குறைவே.இவரது விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானதாக இருந்து வருகிறது.

Blue Sattai Maaran Movie Shoot Wrapped Up

படங்களை குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? படம் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ? என்று பல திரைத்துறையினரும் , ரசிகர்களும் இவரை விமர்சித்தனர்.இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக மாறன் கடந்த வருடம் அறிவித்தார்.

Blue Sattai Maaran Movie Shoot Wrapped Up

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.மாநாடு படத்தை தயாரிக்கவிருந்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.