பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கில் சோம் சேகர் கன்பெக்ஷன் ரூமில் இருந்து கேபிக்கு கால் செய்து பேசினார். அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்யும் விதத்திலேயே பேசிக்கொண்டனர். நாய்க்குட்டி, கேபி இளம் வயதில் சந்தித்த அவமானங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இருவரும் பேசினார். இறுதியில் சோம் காலை வைத்துவிடு என கேட்டதால் Hope you win என கூறிவிட்டு காலை கட் செய்தார். அதன் பின் சோமின் strategy-யை பலரும் பாராட்டினார்கள்.

கேபி தான் வேண்டுமென்றே தான் போனை வைத்ததாக கூறினார். சனம் ஷெட்டி, அனிதா இது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். தான் அர்ச்சனா கேங் பற்றி சொன்னது நிரூபணம் ஆகிவிட்டது என பாலாஜி பேசினார். காலையில் இருந்து ஏன் பேசவில்லை என பாலாஜி கேட்க, காலையில் இருந்து நீங்களும் பேசவில்லை அதனால் நானும் விட்டுவிட்டேன் என ஷிவானி பதில் சொன்னார். உங்களிடம் பேச வேண்டாம் என நினைத்தேன். அவ்வளவு தான் என ஷிவானி அவரிடம் கூறினார்.

நான் வேறு விஷயங்களில் பிஸியாக இருந்தேன் என பாலாஜி சொன்னதும் அது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. நான் விளக்கமும் கேட்கவில்லை என சொன்னார். இந்த உரையாடலை பார்க்கும்போது அவர்கள் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

ரமேஷ் ராஜா வீடு கன்னுகுட்டி போல் இருப்பது பற்றி ரம்யா பேசினார். மேலும் அர்ச்சனா, ரியோ, நிஷா உள்ளிட்டவர்களை நாமினேட் செய்ய காரணங்களை கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்ல திணறினார். இறுதியில் ரம்யா கேட்டுக்கொண்டதால் ரமேஷ் காலை கட் செய்தார். ஆனால் பிக் பாஸ் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி ரம்யாவை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்தார்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பாலாஜியிடன் கேட்க வேண்டிய கேள்விகளை ஆஜீத்திடம் கேட்கிறார் ரியோ. இதனை பார்த்த ரம்யா மற்றும் சனம் இந்த கேள்விகளை எதற்கு ஆஜீத்திடம் கேட்க வேண்டும் என்று கூறுகிறார். இதை ஒரு ஓரமாக பாலாஜி மற்றும் ஷிவானி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வார எவிக்ஷன் சற்று சூடுபிடிக்கும் என்று ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.