பிக் பாஸ் வீடு நேற்று முன்தினம் முதல் கால் சென்டராக மாறி இருக்கிறது. போட்டியாளர்கள் இதில் கேட்கும் சில கேள்விகளை பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ரியோ அஜித்துக்கு போன் செய்து பேசி இருக்கிறார். வீட்ல எல்லாமே கேம், எல்லாமே strategy என யாரு சொல்வது என ஆஜித்திடம் ரியோ கேட்க, அதற்கு அவர் பாலா சொல்றார் என பதில் சொல்கிறார்.

அனிதா, சனம் போன்றவர்கள் நாங்கள் அனைத்தையும் கேம் ஆக தான் பார்ப்போம் என சொல்லும் போது, அவர்களின் friendship அழகாக இருக்கிறது என ரியோ சொல்ல, இதையெல்லாம் ஏன் ஆஜித்திடம் சொல்றாரு ரியோ என்று தான் நம் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. அதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரம்யாவே கேட்டுவிட்டார். பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் இவர் ஆஜித்திடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என கலாய்த்துள்ளார். 

மேலும் ரியோ தொடர்ந்து அன்பு.. அன்பு.. என பல விஷயங்களை பேசுகிறார். இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா ? என்கிற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். இப்படி ரியோ அன்பு பற்றி பேசி இருப்பது நெட்டிசன்கள் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் ஒரே ஒரு முறை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குப் போனார். ஆனால், அதற்கு பிறகு அர்ச்சனாவின் கேங்கில் ஐக்கியம் ஆகி, ஜெயிலுக்குப் போவதை சூப்பராக தவிர்த்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் ஜித்தனாக ரமேஷ் இருந்தால் ஜித்தியாக இருப்பது ரம்யா பாண்டியன் தான். ரமேஷுக்கு கால் போட்ட அவர், என்னை நாமினேட் பண்ணனும்னா என்ன ரீசன் சொல்வீங்க என ஆரம்பித்தார். நீங்க சைலன்ட் கில்லர், சிரிச்சுன்னே ஊசி போடுவீங்க என ஜித்தன் ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் அடித்து விட்டார்.

ஜித்தன் ரமேஷ் சொன்னதை கேட்டதும், கடுப்பான ரம்யா பாண்டியன், ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறிவிட்டு, பின்னர் மீண்டும் பொறுமையை கையாண்டு, ரமேஷுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என யோசித்து, நிஷாவை நாமினேட் பண்ணனும்னா என்ன சொல்லுவீங்க என்று கொக்கிப் போட்டு ஸ்கோர் பண்ணார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கிறார் சனம். தன் தவறை உணர்ந்த ரியோ, பிக்பாஸ் முன்பு நடந்ததை விவரிக்கிறார். அடுத்த சண்டை தயார் நிலையில் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.