ஜீ தொலைக்காட்சியில் கடந்த 2014 முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் Kumkum Bhagya.Sriti Jha மற்றும் Shabbir Ahluwalia இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.இந்த தொடர் இந்தியா முழுவதும் ரசிக்கப்பட்ட தொடராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இந்த தொடர் பல விருதுகளையும் வென்று அசத்தியுள்ளது.

பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.தமிழில் முதலில் பாலிமர் தொலைக்காட்சியில் இரு மலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது.பின்னர் ஜீ தமிழில் கடந்த 2016 முதல் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழிலும் இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.தமிழில் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று உள்ள டப்பிங் தொடர் என்ற பெருமையை இந்த தொடர் பெற்றுள்ளது.ஆறு வருடங்கள் கடந்தும் இந்த தொடருக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறையாமலேயே உள்ளது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் zeeshan khan , அதே தொடரில் தனக்கு அம்மாவாக நடித்த Reyhnaa Pandit என்பவரை காதலித்து வருகிறார் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்றும் தகவல் பரவி வந்தன.இதனை உறுதிசெய்யும் விதமாக zeeshan தனது இன்ஸ்டாகிராமில் முத்த புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதிசெய்துள்ளார்.