தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறார். தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது. 

அடுத்ததாக தனது புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் இயக்குனர் வசந்தபாலன். இந்த புதிய திரைப்படத்தில் கைதி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.அற்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த இயக்குனர் வசந்தபாலன் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார். 

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க , சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதாநாயகி துஷாரா விஜயன் இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் & நடிகை துஷாரா விஜயன் கலந்து கொண்டுள்ள இந்த படப்பிடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தின் அதிரடியான படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது . அந்த படப்பிடிப்பு காட்சிகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்.