கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

anushka

அதில், வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதையெல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் இயன்றதை இப்பொழுது செய்ய முடியாத நிலை. புவியியல் ரீதியான தடைகள் இருந்தாலும் நாம் ஒன்றாக நிற்கிறோம். நம்மை பாதுகாக்க, நம்மை கவனித்துக்கொள்ள பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது. சிறியதோ பெரியதோ அந்த கதாப்பாத்திரத்தை மனிதனாக மனிதத்தன்மையுடன் செய்வோம் என்று அற்புதமாக குறிப்பிட்டுள்ளார். 

anushkashetty

தென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் சைலன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஹேமந்த் மதுகர் இயக்கிய இப்படத்தில் நடிகர் மாதவன் அனுஷ்காவுடன் இணைந்து நடித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A message to all around the world,Thank you 😊

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on