குட்டி பொம்மையுடன் புட்ட பொம்மா ! அஞ்சனாவின் அசத்தல் நடனம்
By Aravind Selvam | Galatta | April 07, 2020 21:06 PM IST

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.
டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.இவர் ஜீ தமிழில் தொகுத்து வழங்கி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடைபெறாததால் வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் பிரபலங்கள்.அஞ்சனா வைரல் பாடலான புட்டபொம்மா பாடலுக்கு ஆடும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.
@anjanarangan ##buttabomma with my Kutti Bommai❤️ ##quarantinelife ##lockdown ##niece ##love ##twinning
♬ original sound - SwAmy PriyAzz💕