தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்த சுழல் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

மலையாளத்தில் புலிமடா எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னதாக தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படம், துருவநட்சத்திரம், மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களில் முன்ன்ணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் திரைப்படம் டிரைவர் ஜமுனா.

வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, stand-up காமடியன் அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கோகுல் பயனாய், ஒளிப்பதிவில் R.ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் வாலாஜாபாத்தில் இருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமட த்ரில்லான பயணத்தை கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமான டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…