தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகராக விளங்கும் தளபதி விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து பல சமூக நல பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடைபெற்ற தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக மக்களுக்கான ரத்த தேவைக்கு உதவும் வகையில் தளபதி விஜய் குருதியகம் எனும் ரத்ததான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்,ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கங்கள், யூடியூப் சேனல் மற்றும் இணையதளம் ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், 

வணக்கம்..
தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய "தளபதி விஜய் குருதியகம்" என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றோம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும். 

"தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ ட்யூப், இணையதளம் (Facebook, Instagram, Twitter, Youtube Channel & Website) பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம். மற்றபடி, இன்றைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளனர்.
குறிப்பு:
எங்கள் பக்கத்தில் வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது; மற்றும் பக்கத்தின் நிறை குறைகளை, பின்னுாட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டினால் எங்கள் சேவைகளை மேலும் சிறப்பிக்க உதவியாக இருக்கும்.

அன்பார்ந்த பத்திரிக்கை நண்பர்களே, இந்த செய்தியையும் மற்றும் இந்த செயலியின் சேவை மூலம் அனைத்து மக்களும் பயன்பெறவும், இந்த செய்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து உதவ வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்
புஸ்ஸி N.ஆனந்து

என தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தளபதி விஜய் குருதியகம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 

தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்கை செயலி ஆகியவை இனிதே துவங்கி வைக்கப்பட்டது.@actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/gYLA5yysRz

— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) July 6, 2022