தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நடிகை டாப்சி. கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப்சி நடித்து வெளிவந்த கேம் ஒரு திரைப்படம் திரில்லர் திரைப்படமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தது. 

இந்நிலையில் ஹஸீன் தில்ரூபா எனும் இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் . ஹஸீன் தில்ரூபா நேரடியாக நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் சமீபத்தில் வெளியானது.இந்திய அளவில் பிரபலமான முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை டாப்ஸி தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை டாப்ஸி.. 

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த திரைத்துறையில் நான் இருக்கிறேன். மக்களின் அபிமானத்தில் இருக்கும் திரைப்பிரபலமாக நான் இருப்பேன் என்று என்றும் கனவில் கூட கண்டதில்லை. ஆனால் என்னுடைய உழைப்பை மதித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. பெரிய சக்தி நமக்கு கிடைக்கும் பொழுது உடனே மிகப் பெரிய பொறுப்பும் நமக்கு கிடைக்கிறது அந்த வகையில் ஒரு தயாரிப்பாளராக அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்  தயாரிப்பு நிறுவனம் மூலமாக என்னுடைய திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறேன் என தெரிவித்திருக்கிறார். 

நடிகை டாப்ஸி & ப்ராஞ்சல் கண்த்யா இணைந்து உருவாகியிருக்கும் இந்த அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக தயாராகும் முதல் படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.  ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ப்ளர் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. பிளர் எனும் த்ரில்லர் திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அஜய் பல் இயக்குகிறார். தொடர்ந்து டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் அடுத்தடுத்த தயாரிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.