ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் ஹூப் நடனம் ! வீடியோ இதோ
By Aravind Selvam | Galatta | June 28, 2021 17:22 PM IST

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.தமிழில் சில படங்கள் நேரடியாக வெளியானதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதிஹாசன் எப்போதும் ரசிகர்களுடன் கலந்துரையாடி தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது ஹூப் எனப்படும் வளையத்துடன் ஆடும் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்,இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Big announcement on Hiphop Tamizha Adhi's next Tamil film! Check Out!
28/06/2021 06:00 PM
Nayanthara and Vignesh Shivans latest secret picture goes viral - Check Out!
28/06/2021 05:00 PM