இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. எந்திரன் மற்றும் பேட்டை திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சிவா அண்ணாத்த படத்தை இயக்குகிறார்.

முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கும் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து  மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவில் தயாராகும் அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் அண்ணாத்த படத்தின் பணிகளுக்கு நடுவில் முக்கிய தகவலை நடிகை மீனா பகிர்ந்துகொண்டார். அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் , டப்பிங் பணிகளில் கலந்து கொண்ட நடிகை மீனா இயக்குனர் சிவாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actress meena shared the photos of annaatthe dubbing work with director siva actress meena shared the photos of annaatthe dubbing work with director siva