இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது திரைப்படம். மகதீரா, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்துவரும் S.S.ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா  தயாரித்துள்ளார்.

RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைக்கிறார். முன்னதாக வெளியான படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற அக்டோபர் 13ஆம் தேதி RRR திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

இந்நிலையில் இன்று RRR திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் பாடியிருக்கும் முதல் பாடலான நட்பு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. ட்ரண்டாகும் இப்பாடலை கீழே உள்ள லிங்க் கீழே காணலாம்.