தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா.தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து ஹிட் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.தமிழ்,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தமிழில் இவர் கடைசியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக்காண விஜயின் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.இலியானா தனது ஜீரோ சைசுக்காகவும் , நடன அசைவுகளுக்காகவும் ரசிகர்களிடம் பேர் போனவர்.இவரது பெல்லி டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது.

சவுத் இந்தியன் படங்களை தொடர்ந்து இலியானா ஹிந்தி படங்களிலும் நடித்து ஹிந்தியிலும் தனது அழகாலும்,நடனத்தாலும்,நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.ஹிந்தியிலும் இவர் நடித்த படங்கள் செம ஹிட் அடித்தன.இவர் தனது நடன விடீயோக்களையும்,டயட் ரகசியங்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்வார்.

ரசிகர்களை அதனை பின்பற்றசொல்லி அறிவுரையும் வழங்குவார் இலியானா.அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் இலியானா.தற்போது தனது பழைய பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இலியானா.இந்த புகைப்படம் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.