தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நித்திஷ் வீரா உயிரிழந்துள்ளார். இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் மணி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நித்திஷ் வீரா. தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஜினிகாந்தின் மகனாக காலா படத்திலும், தனுஷ் நடிப்பில் அசுரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அசுரன் திரை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார்.45 வயதான நித்தீஷ் வீரா சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .தீவிர சிகிச்சையில் இருந்த நித்திஷ் வீரா தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நடிகர் நித்திஷ் வீராவின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .நித்திஷ் வீராவின் மறைவுக்கு பல தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள லாபம் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா  பாதிப்பால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நித்திஷ் வீரா நகைச்சுவை நடிகர் பாண்டு துணை நடிகர்கள் என பலரது மறைவு தமிழ் சினிமாவை பெரும் துயருக்கு உள்ளாக்கி இருக்கிறது.