தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்கும் மரக்கார் -அரபிக்கடலின்டே சிம்மம் எனும் திரைப்படத்திலும் தமிழில்  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்திலும் தெலுங்கில் நடிகர் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் கில்லாடி திரை படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரையுலகில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா, சரத்குமார் என திரையுலகில் நட்சத்திரங்களான நடிகர்கள் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது வழக்கம்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் விதமாக தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோ வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார். ஸ்டைலாக ஆக்சன் கிங் அர்ஜுன் தோன்றும் இந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ...