ஜீவா சீறு படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படமான 83-ல் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகியுள்ளது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.

83 Will have Theatrical Release Before OTT Release

ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ் திரையரங்க உரிமையை உலகநாயகன் கமல்ஹாசன்,ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

83 Will have Theatrical Release Before OTT Release

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என்று வதந்திகள் பரவி வந்தன.இது குறித்து பிரபல பாலிவுட் மீடியாவிற்கு பதிலளித்த படத்தின் இயக்குனர் 83 திரையரங்குகளில் பார்த்து மகிழவேண்டிய ஒரு படம் அந்த அனுபவம் நிச்சயம் வேண்டும் அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்,திரையரங்குகளில் வெளியான பிறகே இந்த படம் OTTயில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

83 Will have Theatrical Release Before OTT Release