நெல்லை அருகே தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை ஒரு கும்பல் அத்து மீறி பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நெல்லை புறநகர் பகுதியான ரெட்டியார் பட்டி நான்கு வழிச் சாலை பகுதியானது எப்போதுமே ஆள் நடமாட்டம் சற்று குறைந்த பகுதியாகவே காணப்படும். இதன் காரணமாக, குறிப்பிட்ட அந்த பகுதிகளில் சில நேரங்களில் மாலை வேளைகளில் அப்பகுதி இளைஞர்கள் பைக் ரேஸ்சில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், காதல் ஜோடிகள் அங்குச் சென்று நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது என்பது வழக்கமாக நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கடந்த 4 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். 

இதனால், வருமானம் இல்லாத சிலர், குறிப்பிட்ட இந்த பகுதிகளுக்கு வரும் அப்பாவி காதல் ஜோடிகளைக் கடுமையாக மிரட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவது தற்போது வெளிசத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலருடன் அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அங்கு, வெளியாட்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த காதல் ஜோடி தனிமையில் அங்கு அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த காதல் ஜோடியின் இந்த “கொஞ்சல் மெஞ்சல் கிண்டல்” காட்சிகளை அந்த பகுதியில் மறைந்திருந்து பார்த்த சிலர், அவர்கள் அருகில் சென்று இருவரையும் பிடித்து தரையில் அமர வைத்து உள்ளனர்.

அதன் பிறகு, இருவரையும் மிரட்டும் தோணியில், அவர்களது குடும்ப பின்புலம் பற்றி விசாரித்துள்ளனர். அத்துடன், “என் அப்பா நம்பர் கொடு? அந்த ஆளுகிட்ட சொன்னா தான் நீங்க அடங்குவிங்க” என்று பேசி அந்த காதல் ஜோடியை மிக கடுமையாகப் பேசி உள்ளனர். இப்படி அந்த ஜோடியை மிரட்டுவதையும், அங்கிருந்தவர்களில் ஒருவன், தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டான்.

அப்போது, அந்த இளம் பெண், “எங்கள விட்டுறுங்க அண்ணா, ப்ளீஸ் அண்ணா..” என்று மிகவும் கெஞ்சி உள்ளார். ஆனால், இறக்கம் இல்லாத அந்த கும்பல், வந்தது வரைக்கு லாபம் என்று, அவர்கள் வைத்திருந்த செல்போன்கள், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவர்கள் கையில் வைத்திருந்த பணம் உள்ளிட்ட கிடைத்த எல்லாவற்றையும்” அபகரித்துக்கொண்டனர்.

மேலும், “இங்கு நடந்ததை வெளியில் சொன்னால், இருவரும் ஒன்றாக இருந்த இந்த வீடியோவை வெளியிட்டு விட்டு, உங்கள் வீட்டிலும் வந்து போட்டுக்கொடுத்து விடுவேன்” என்று அவர்கள் மிரட்டி விட்டு, அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர்.

அந்த கும்பலின் மிரட்டல் காரணமாக, இது குறித்து அந்த காதல் ஜோடி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால், தங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் என்று வீட்டில் யாரிடமும் பேசாமல் சில நாட்கள் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

ஆனால், மிரட்டல் கும்பல் காதலர்களை மிரட்டிய அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காவல் துறை கவனத்திற்குச் சென்றுள்ளது. வீடியோவில், அந்த காதல் ஜோடி சொன்ன பெயர் முகவரியை வைத்து, போலீசார் விசாரித்தனர். 

அதன்படி, குறிப்பிட்ட அந்த காதலரின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவர்களிடம் இந்த மிரட்டல் குறித்து விசாரித்துள்ளனர். அத்துடன், “இந்த மிரட்டல் சம்பவம் உண்மையா?” என்றும், உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அந்த ஜோடி, “மிரட்டல் சம்பவம் உண்மை தான்” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும், காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

இதனிடையே, தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை, ஒரு கும்பல் அத்து மீறி பணம் கேட்டு மிரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.