கடந்த 2018ஆம் ஆண்டு மே 22-ம் தேதி  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு எதிர்காக பல கண்டனங்கள் எழும்பியது. 


இதை தொடர்ந்து  தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக விசாரணை நடைபெறமால இருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 


தூத்துக்குடி போராட்டத்தின் போது , தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் , ‘’ போராட்டம் வன்முறையாக மாற காரணம் சமூக விரோதிகளே. போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் ”  என்று பேட்டி அளித்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகாமல், அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதனால்  வரும் ஜனவரி மாதத்துக்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அனுப்பி அவர் விசாரணை செய்யப்படுவார் என்று தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர்  இன்று தெரிவித்து இருக்கிறார்.