12 ஆம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி 6 மாதம் கர்ப்பமாக்கிவிட்டு, பக்கத்து வீட்டு இளைஞர் தலைமறைவு ஆகிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அம்பத்தூர் அடுத்து உள்ள திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஜோதி என்ற இளைஞர், படித்து முடித்து விட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

அப்போது, பக்கத்து வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்த உறவுக்கார பெண்ணான சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

தற்பேது கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமிக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

இதனால், மகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கிறாள் என்ற நினைப்பில், சிறுமியின் பெற்றோர் வழக்கம் போல், வேலைக்குச் சென்று உள்ளனர். இதனால், அந்த 12 ஆம் வகுப்பு சிறுமி மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்து ஆன்லைன் வகுப்பு மூலமாகப் படித்து வந்தார்.

இப்படி, வீட்டில் உறவுக்கார சிறுமி தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட 24 வயதான ஜோதி என்ற இளைஞர், இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சிறுமியின் பெற்றோர் வெளியே செல்லும் நேரம் எல்லாம், அந்த சிறுமியிடம் காதல் வார்த்தைகளை அள்ளி வீசி வந்திருக்கிறார்.

அத்துடன், “நான் கல்யாணம் செய்துகொண்டால், உன்னைத் தான் கல்யாணம் செய்துகொள்வேன்” என்றும், அவர் கால் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்.

ஆனால், தொடக்கத்தில், ஜோதியின் காதல் வலையில் விழாமல் இருந்த அந்த சிறுமி, ஜோதியின் தொடர்ச்சியான காதல் அம்பில் ஒரு கட்டத்தில் மயங்கியிருக்கிறார்.

இப்படியாக, ஜோதியின் காதல் ஆசையில் விழுந்த அந்த சிறுமியை, ஜோதி சில்மிஷம் செய்திருக்கிறார். இதனை அவர் தடுக்கவும் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில், அந்த சிறுமி தனது படிப்பில் கவனத்தை செலுத்தாமல் இழந்து, காதலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, அவர்கள் இருவரம் காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வீட்டிற்கு வந்த ஜோதி, சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்து உள்ளார். இதனை சிறுமி தடுத்தபோதும், காதலன் ஜோதி வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார். தொடக்கத்தில், சிறுமிக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்து உள்ளது. அதன் பிறகு, சில மாதங்கள் சென்ற பிறகே, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து சிறுமி அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

இதனையடுத்து, தனது பெற்றோருக்குப் பயந்த அந்த சிறுமி, தனது கர்ப்பத்தைப் பற்றிப் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார்.

ஆனால், சிறுமி கருப்பம் அடைந்து 6 மாதம் ஆகிவிட்டதால், அவர் வயிறும் பெரிதாகிவிட்டது. இதனால், தனது கர்ப்பத்தை மறைக்க முடியாத அந்த 12 ஆம் வகுப்பு சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த உண்மையைக் கூறி அழுதிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்மந்தப்பட்ட உறவுக்கார இளைஞனிடம் சண்டைப்போட்டிருக்கிறார்கள். இதனால், காதலன் ஜோடி வீட்டை விட்டுத் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காதலன் ஜோதி மீது, சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த
போலீசார், காதலன் ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.