பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் தப்ப முயன்ற பெண்ணின் உடற்பாகங்களைக் கிழித்து கொடூர கொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்து உள்ளது. 

இந்த சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் கொலையும், கொலை சார்ந்த காரணங்களைத் தேடும் போது, “ச்சீ” என்று தான் முகம் சுளிக்க வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த காரணங்களும் நாதரித்தனமாகவோ அல்லது நாற்றம் எடுக்கும் விசயமாகவோ தான் இருக்கிறது. 

இந்த சமூகத்தில் அறுவறுப்புகளுக்கு பஞ்சம் இல்லை. கேவலங்களுக்கும், அசிங்கங்களுக்கும் பஞ்சம் இல்லை. அவன் பரதேசியாகவே இருந்தாலும், பாலியல் கிளர்ச்சியால் அவன் கொடூரத்தின் ஒட்டு மொத்த உருவாக்கமாக உருமாறிப் போய்விடுகிறான். அதனால், தடுமாறிப் போய்விடுகிறான். இதனால், சுயம் மறந்து மிருகமாகிறான். 

மிருகமாவதால், தான் நினைப்பது சரி; செய்வது சரி என்று “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் வரும் திருட்டு கும்பலின் மன நிலைக்கு வந்து விடுகிறான். இதன் காரணமாக ஆதிகால காட்டு மனிதனின் அரக்கத் தனமும், இறக்கமற்ற குணமும், அவனுள் குடிகொள்கிறது. இதனால், பாலியல் வெறி தலைக்கேறி.. அந்த பாலியல் இன்ப ரசத்தை ரத்தமாகக் குடிக்கும், காட்டேறியாக உருமாற்றம் அடைகிறான். காட்டேறியானவன் மனித ரத்தத்தை மட்டுமா குடிப்பான், அந்த ரத்தத்திலேயே ஊறிப்போன அந்த பெண்ணின் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் பிச்சி பிச்சி தின்னும் ஓநாய்களாக மாறிப்போவான். அதைத் தான், இன்றைய மனிதன் சமூக விலங்காக மாறி செய்கிறாள்.

எப்போதே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் வசித்த மதனின், மனித மாமிசங்களை உண்டான் என்கிறது வரலாறு. அதன் பிறகு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கந்து நாகரிகத்தின் உச்சியில் அமர்ந்து நாம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் கூட, சில மனித சமூக விலங்குகள் மனித மாமிசத்தை வேட்டையாடி தின்று செறிக்கத் திட்டமிட்டிருப்பது தான், மனித குணங்களின் அவமான சின்னங்கள்.   

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த 48 வயதான மலர்க்கொடி, கணவனை பறிகொடுத்து விட்டு விதவையாகத் தனிமையில் வாழ்ந்து வருகிறார். 

தனி ஒருத்தி, குடும்பமாக வாழும் ஆண்களால் இரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் மனுஷியாக இன்றைய காலத்திலும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு, இந்த மலர்கொடியே ஒரு அத்தாட்சி. 

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்துள்ள கோவில்சீமை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பாஸ்கர் மீது தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40 க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

திருட்டையே தொழிலாகப் பார்ப்பதாகக் கூறப்படும் விஜய் பாஸ்கர், தான் திருடும் நகைகளை அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பேச்சியம்மாளிடம் கொடுப்பார் என்றும், அவர் தான் அந்த நகைகளை விற்று விஜய் பாஸ்கரிடம் பணமாக மாற்றிக் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பேச்சியம்மாள் வீட்டிற்கு விஜய் பாஸ்கர் அடிக்கடி சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பேச்சியம்மாள் வீட்டிற்குச் சென்ற விஜய் பாஸ்கர், பேச்சியம்மாள் வீட்டில் இருந்த அவரது மகளிடம் செல்போனைப் பறித்துச் சென்று உள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் மது போதையில் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த விஜய் பாஸ்கர், பேச்சியம்மாள் வீட்டுக் கதவைத் வெகு நேரம் தட்டி உள்ளார். 

ஆனால், கதவை திறந்தால் எதுவும் விபரீதம் நடந்து விடுமோ என்று பயந்த பேச்சியம்மாள், கதவைக் கடைசி வரை திறக்கவே இல்லை. இதனால், வெகு நேரமாகக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, கதவு திறக்கப்படாத நிலையில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற விஜய் பாஸ்கர், நேராக அந்த பகுதியில் உள்ள விதவை மலர்க்கொடி வீட்டிற்குச் சென்று உள்ளார். 

மலர்க்கொடியின் வீட்டின் கதவை விஜய் பாஸ்கர் தட்டி உள்ளார். “என்னமோ யாரோ” என்று கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி. மலர்க்கொடி கதவைத் திறந்த வேகத்தில் உள்ள புகுந்த விஜய் பாஸ்கர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், அவரிடமிருந்து மலர்க்கொடி தப்ப முயன்றுள்ளார். 

இதனால், கடம் ஆத்திரமடைந்த போதையில் இருந்த விஜய் பாஸ்கர், தான் எப்போதும் இடுப்பில் வைத்திருக்கும் கத்தியால் மலர்க்கொடியின் மண்டையில் பலமாகத் தாக்கி உள்ளார்.

இதில், மலர்க்கொடி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது, கடும் வெறியில் இருந்த விஜய் பாஸ்கர், மலர்க்கொடியின் உடற்பாகங்களை வெறிபிடித்தார் போல் கிழித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, மலர்க்கொடியின் பிறப்புறுப்பிலிருந்து கத்தியை உள்ளே விட்டு, அதன் வழியாக அந்த பெண்ணின் குடல் உருவப்பட்டு வெளியே கிடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும், அந்த பிறப்புறுப்பில் ரதம் படிந்து கடும் காயங்களுடன் காணப்பட்டுள்ளன. 

அத்துடன், அந்த பெண்ணின் பல உடல் பாகங்களிலும் காயங்கள் இருந்த நிலையில், அவள் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார், மலர்க்கொடியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மலர்க்கொடி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விஜய் பாஸ்கரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.