திண்டுக்கல் அருகே 21 வயது இளைஞன் 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம் சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தட்டக்குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரவணக்குமார், அங்குள்ள புலிக்குத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்தள்ளார்.

21 yo Saravanan sexual assault on 11 year old girl

அந்த உறவினர் மகள் 11 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அத்துடன், சரவணக்குமார் அடிக்கடி அந்த வீட்டிற்குச் சென்றுவந்ததால், அந்த 11 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

மேலும், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறியும், மிரட்டியும், அந்த சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

21 yo Saravanan sexual assault on 11 year old girl

இதனைக் கவனித்த சிறுமியின் தாயார், அந்த சிறுமியிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளனர். அப்போது, சரவணக்குமார் அடிக்கடி தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதை சிறுமி கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 5 மாதம் கருவுற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, 21 வயது இளைஞர் 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.