கடந்த 2003-ம் ஆண்டு குறும்பு எனும் திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் போன்ற வெற்றி படங்களை தந்தவர். தல அஜித் வைத்து இவர் இயக்கிய பில்லா திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இரண்டாவது முறையாக அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்தார். தற்போது ஷேர்ஷா எனும் பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். 

Vishnu Vardhan Clarifies Not Using Fb And Insta

இந்நிலையில் இவரது பெயரை கொண்டு ஃபேக் அக்கவுன்ட்டுகள் உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அப்பதிவில், எச்சரிக்கை.. எனக்கு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இல்லை. என் பெயரை வைத்து யாரோ தவறாக பயன் படுத்தி வருகின்றனர். இந்த போலி அக்கௌன்ட்டை ரிப்போர்ட் செய்து, பின்தொடராமல் இருங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

Vishnu Vardhan Clarifies Not Using Fb And Insta

நெட்டிசன்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் பிரபலங்களின் பெயரில் போலி அக்கௌன்ட்டுகளை உருவாக்கி, தேவையற்ற கருத்துக்களை பதிவு செய்வது, பணம் பறிப்பது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலாட்டா சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.