தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 95% நிறைவடைந்து விட்டது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 64 படத்தை மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.

Thalapathy 64

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் செவன் Screen ஸ்டுடியோவை சேர்ந்த லலித் குமார் இந்த படத்தில் லைன் Producer ஆக பணியாற்றுகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் 2020 சம்மருக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த செய்தி ரசிகர்களிடம் காட்டுத்தீயாய் பரவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இது குறித்து அறிய படக்குழுவினர் தொடர்புகொண்டோம் அப்போதும் அவர்கள் இது வெறும் வதந்தி தான் என்று தெரிவித்தனர்.

Thalapathy 64

மேலும் இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து முடிவு செய்யவில்லை என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Thalapathy 64