Beast படக்குழுவினரின் மாஸ்டர் பிளான் ! சூப்பரான ஷூட்டிங் அப்டேட்
By Aravind Selvam | Galatta | September 20, 2021 15:31 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
சென்னையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து தனிவிமானம் மூலம் Beast குழுவினர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.டெல்லியில் ஒரு வாரம் ஷூட்டிங் நடக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது தளபதி விஜய் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
#Beast Delhi schedule ✈️ #Master @actorvijay pic.twitter.com/Gu3XYay3li
— VTL Team (@VTLTeam) September 20, 2021
Bigg Boss Tamil Season 5 Launch Date Official Announcement Promo | Kamal Haasan
20/09/2021 06:30 PM
Arun Vijay's next mass action film BORRDER release date - Official Announcement!
20/09/2021 04:30 PM
WOW: Yogi Babu joins RJ Balaji's next laugh riot family comedy film - Check out!
20/09/2021 03:35 PM