சயீரா நரசிம்மா ரெட்டி படத்தின் முதல் பாடல் இதோ !
By Aravind Selvam | Galatta | September 23, 2019 11:59 AM IST
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் சரித்திர படம் சயீரா நரசிம்ம ரெட்டி.இந்த படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.அமித் த்ரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமிதாப் பச்சன்,விஜய் சேதுபதி,நயன்தாரா,தமன்னா,ஜெகபதி பாபு,கிச்சா சுதீப் என இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்