இந்த ஆண்டு வெளிவர உள்ள முக்கிய பங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரக்கனி ,பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அயன் ,மாற்றான் வெற்றியை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தின் நாயகன் சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.