கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளர். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்கெடுத்து இரண்டாம் இடத்தை பெற்றார். தற்போது கலாட்டாவிற்கு இவரளித்த பேட்டியில், பிக்பாஸ் மூன்றாம் சீசன் குறித்தும் அதில் இடம்பெற்ற பங்கேற்பாளர்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்தார்.

snehan

சேரன் பிக்பாஸ் சென்றிக்கவே கூடாது. சேரனுடைய உயரம் மிகவும் பெரிது. அவர் கூட சரிசமமாக பழகக்கூடியவர்கள் சென்றிருக்க வேண்டும். சேரன் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் அவர் முகம் வாடும் போது, நான் கண்ணீர் விடுகிறேன் என்று சினேகன் கூறியுள்ளார்.

kavinlosliya cheran

ஓவியா மற்றும் லாஸ்லியா இருவரையும் ஒப்பிடுகிறார்களே.. அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. லாஸ்லியாவை துவக்கத்தில் என் வீட்டு பெண்ணாக எண்ணினேன். பின் கவினிடம் பேசி பழகிய விதம் சற்றும் பிடிக்கவில்லை. TRP-காக தான் கவின் இப்படி செய்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறு.

biggboss

வனிதாவின் ரீஎன்ட்ரி குறித்து பேசியவர், வனிதா மீண்டும் வந்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். கஸ்தூரி நல்ல தோழி என்று கூறினார் சினேகன். செல்வதற்கு முன் அவரிடம் போகலாமா எப்படியிருக்கும் நண்பா என்றெல்லாம் கேட்டறிந்தார்.