டக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | December 23, 2019 16:22 PM IST

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் சித்தார்த். சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து அதில் முழுமூச்சில் ஈடுபட்டு அசத்துபவர். சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என அடுத்தடுத்து இரண்டு ரிலீஸ் தந்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டக்கர்.
இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தை கப்பல் புகழ் இயக்குனர் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்குகிறார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. புரட்சி தளபதி விஷால் இதனை வெளியிட்டார்.
சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்து இருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கவுதம் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டைட்டில் போலவே டக்கராக வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.