தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.பேட்ட,சூப்பர் டீலக்ஸ்,சிந்துபாத் என்று வரிசையாக சூப்பர்ஹிட் படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சங்கத்தமிழன்,லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த வருட துவக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார்.இதற்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்தன.

இந்த படம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த படம்,சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை பெற்றது.இந்த விழாவில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானும் கலந்துகொண்டார்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷாருக் கான் தன் வாழ்வில் சந்தித்த மிகச்சிறந்த நடிகர்களில் விஜய்சேதுபதி ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத விஜய்சேதுபதி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.