சசிகுமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.

ராஜவம்சம் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மானே உன்ன, மாப்பிள்ள வந்தா ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. இந்நிலையில் படத்தின் சென்சார் தகவல் வெளியானது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. இதனால் நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறலாம். 

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. 

விருமாண்டி இயக்கவிருக்கும் புதிய படத்தில் சசிகுமார் தான் நாயகனாக நடிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர். விஸ்வநாதன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாம் படமாகும். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

sasikumar raajavamsam censored with u certificate nikki galrani