பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக கென்னடி கிளப்,கொம்பு வெச்ச சிங்கம்டா படங்களின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தவிர நெல் ஜெயராமனின் வாழ்க்கை வலராற்று படம்,நாநா என்று பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் வருத்தப்படாத வாலிபர் சிங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராமுடன் இணைகிறார் என்று நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இந்த படம் குறித்த சிறப்பு தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த படத்தை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான Screen Scene நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் தகவல்கள் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துளளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தளபதி விஜயின் பிகில் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியதை தொடர்ந்து இந்த படத்தை Screen Scene நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.